கொலை மிரட்டல் எதிரொலி; சல்மான்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு

மும்பை: பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கானுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொன்ற தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தது. இதையடுத்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சல்மான்கானும் சொந்தமாக சில பாதுகாவலர்களை நியமித்திருந்தார்.

இந்நிலையில், சல்மான்கானுக்கு ஒய் பிளஸ் கிரேடு பாதுகாப்பு வழங்குவதற்கு மகாராஷ்டிரா அரசு முடிவெடுத்து உள்ளது. இந்த பாதுகாப்பில் 12 ஆயுதம் தாங்கிய கமாண்டோக்கள் ஈடுபடுவார்கள். இதுபோன்ற பாதுகாப்பு ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், அனுபம் கெர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: