குறட்டை பிரச்னை கதையில் மணிகண்டன்

சென்னை: ‘விக்ரம் வேதா’, ‘காலா’, ‘சில்லுக்கருப்பட்டி’, ‘ஜெய்பீம்’ உள்பட பல படங்களில் முதன்மை கேரக்டரில் நடித்த மணிகண்டன், முதல்முறையாக ஹீரோவாக நடித்துள்ள படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். விநாயக் சந்திரசேகரன் இயக்கி உள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்துள்ளனர்.

முக்கிய கேரக்டர்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் நடித்துள்ளனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் பணியாற்றியுள்ளார். இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் குறட்டை பிரச்னையை மையப்படுத்தி, காமெடியுடன் கூடிய ஜனரஞ்சக படமாக இது உருவாகியுள்ளது.

Related Stories: