விஜய்க்கு வில்லன் ஆகிறார் விஷால்

சென்னை: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இது விஜய்யின் 67வது படம். தற்போது ‘வாரிசு’,‘வாரிசுடு’ஆகிய தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் விஜய் நடிக்

கிறார். இப்படங்கள் வரும் பொங்கலன்று வருகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’படத்தில் நடித்துள்ள விஜய்,‘தளபதி 67’என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இப்படத்தின் மூலம் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கும், ‘விக்ரம்’படத்தில் கமல்ஹாசனுக்கும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்தார். ஹீரோவுக்கு இணையாக அந்த கேரக்டர் பேசப்பட்டது.

இதையடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு இணையான வில்லன் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டு, விஷாலை சந்தித்த லோகேஷ் கனகராஜ், இதுகுறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார். விஷால் நடித்த ‘லத்தி’ படம், வரும் டிசம்பர் மாதம் வருகிறது. அடுத்து ‘மார்க் ஆண்டனி’என்ற பான் இந்தியா படம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்டுவிட்டு முடிவு செய்வதாக விஷால் கூறியுள்ளதால், விஜய்க்கு விஷால் வில்லனா, இல்லையா என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.

Related Stories: