ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை; ஆட்ட நாயகன் ஹசரங்கா

பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நேற்று நடந்த சூப்பர்-12 சுற்று முதல் பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன் குவித்தது. ரகமதுல்லா 28, உஸ்மான் கானி 27, இப்ராகிம் ஸத்ரன் 22, நஜிபுல்லா 18 ரன் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் ஹசரங்கா 4 ஓவரில் 13 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். லாகிரு 2, ரஜிதா, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து வென்றது. நிசங்கா 10, குசால் 25, அசலங்கா 19, பானுகா 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். தனஞ்ஜெயா டிசில்வா 66 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஷனகா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கன் பந்துவீச்சில் முஜீப், ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஹசரங்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: