டிஎன்சிஏ நிர்வாக குழு உறுப்பினராக எஸ். ஸ்ரீனிவாசன்

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழுவில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ஐசிஏ) பிரதிநிதியாக முன்னாள் வீரர் எஸ்.ஸ்ரீ னிவாசன் (57 வயது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகம் மற்றும் இந்தியன் ரயில்வேஸ் அணிகளுக்காக ரஞ்சி டிராபி, வில்ஸ் டிராபி போட்டிகளிலும், மத்திய மண்டலம் சார்பில் தியோதர் டிராபி போட்டிகளிலும் (1986-1992) விளையாடி உள்ள இவர், பிசிசிஐ போட்டி நடுவராகவும், பயிற்சியாளராகவும் (ஏ லெவல்) பணியாற்றியுள்ளார்.

தமிழக யு-16, யு-17, யு-19 அணிகளின் தேர்வுக் குழு தலைவராகவும் இருந்துள்ள எஸ்.ஸ்ரீ னிவாசன், தற்போது டிஎன்பிஎல் தொடரில் போட்டி நடுவராக செயல்பட்டு வருகிறார். டிஎன்சிஏ நிர்வாகக் குழுவில், ஐசிஏ பிரதிநிதியாக இவர் 3 ஆண்டுகள் செயல்படுவார்.

Related Stories: