×

வடகிழக்கு பருவ மழையால் வேகமாக நிரம்பும் ஏரிகள்

சென்னை: வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட பல்வேறு ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 2536 மில்லியன் கனஅடி. மழைநீர் வரத்து வினாடிக்கு 967 கன அடி. சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக 159 கனஅடி வினாடிக்கு திறந்துவிடப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தில் 13 சென்டி மீட்டர் மழை பெய்தது. மற்றொரு ஏரியான சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடி. தற்போது 194 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழைநீர் வரத்து 66 கன அடி. சோழவரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இவை தவிர மற்ற ஏரிகளான மாதவரம் இரட்டை ஏரி மற்றும் பம்மதுகுளம் ஏரி, புழல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன.

Tags : North-East , The lakes are rapidly filling up due to the North-East Monsoon rains
× RELATED வட கிழக்கு டெல்லியில் கன்னையா குமார் போட்டி: காங். அறிவிப்பு