வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை திமுக எம்பியிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை: திமுக அயலக அணி சார்பில் திமுக முப்பெரும் விழா குவைத்தில் நடந்தது. இதில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டனர். அப்போது வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் நல சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை கோரி நடத்தப்பட்டு வரும் பிரசார இயக்கம் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை ஒன்றிய அரசின் கவனத்திற்கு இந்தப் பிரச்னையை நிச்சயமாக கொண்டு செல்வேன் என்று திமுக எம்பி அப்துல்லா உறுதியளித்தார். நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை, நலச்சங்கம் குவைத் மண்டல தலைவர் அப்துல் மஜீத், செயலாளர் திருச்சி முபாரக் பொருளாளர் திருமா இருளப்பன், மூத்த நிர்வாகி தேசம் மாடசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் பீர் முகம்மது, தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை மரைக்காயர் மற்றும் செயற்குழு உறுப்பினர் அய்யப்பன், ஊடக அணி செயலாளர் பக்ருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: