×

கந்துவட்டி கொடுமை மின்கம்பத்தில் கட்டி வைத்து தம்பதி மீது சரமாரி தாக்குதல்

நத்தம்: நத்தம் அருகே கந்து வட்டி கேட்டு மின்கம்பத்தில் கணவன், மனைவியை கட்டி வைத்து தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல், நத்தம் அருகே சாத்தம்பாடியைச் சேர்ந்தவர் ராமன் (51). இவர் அப்பகுதியைச் சேர்ந்த அம்பலம் மகன் ராஜேஷ் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காலத்தில் வட்டி கட்டவில்லையென்றும், அந்த வட்டியை தர வேண்டுமென, ராஜேஷ், அம்பலம், சாந்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து, ராமன், அவரது மனைவி சுமதி (47) ஆகியோரை, மந்தையில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து நேற்று முன்தினம் தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர்.  இதுகுறித்து ராமனின் மகன் ஜோதிமணி, நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிந்து ராஜேஷை கைது செய்தனர். மேலும் அம்பலம், சாந்தி ஆகிய 2 பேரையும்  தேடி வருகின்றனர்.

Tags : Kanduvatti ,Barrage , Kanduvatti brutality Barrage attack on the couple by tying them to the electric pole
× RELATED வீங்கிய முகத்துடன் போட்டோ நடிகை உர்பி...