100 நாள் வேலை திட்டத்துக்கு மேலும் ரூ.25,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சகம் கோரிக்கை

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. 2022-2023ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்காக ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த தொகையில் மாநிலங்களுக்கு இதுவரை ரூ.54,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு கூடுதலாக ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யும்படி ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம்  கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலமாக, இந்த நிதியாண்டு செலவானது, கடந்த நிதியாண்டில் மொத்த செலவான ரூ.98 ஆயிரம் கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.

Related Stories: