வடகிழக்கு பருவமழை காரணமாக போக்குவரத்து நிலவரம் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை

சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் இலங்கைக்கு தெற்கே உருவாகியுள்ள வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் படி சென்னை பெருநகர போக்குவரத்தின் மாலை 04.00 மணி நிலவரம்.

1, மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:-

a)    கணேசபுரம் சுரங்கப்பாதை

b)    இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

2, மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது:-

a)    அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வரை வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.

b)    இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை என்பது இரண்டு சக்கர வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே சுரங்கப்பாதையாகும்.  இந்த மழைநீர் தேக்கத்தினால் இரண்டு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

3, மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு:-

a)    சென்னையிலிருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பில் இருந்து  திருப்பி விடப்பட்டு, காந்தி நகர் ரவுண்டானா வழியாக பேசின்பிரிட்ஜ் பாலாத்தின் மேலே சென்று வியாசர்பாடி சுரங்கம்பாதை வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

b)    புளியந்தோப்பிலிருந்து சென்னையை நோக்கி கணேசபுரம் சுரங்கப்பாதை  வழியாக வரும் வாகனங்களை அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு, பெரம்பூர் மேம்பாலம் வழியாக ஜமாலியா ரோடு, ஓட்டேரி,  அயனாவரம்  செல்வதற்கு வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

c)    இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதின் உள்ளே அனுமதிக்கப்படாமல் இரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

4,  சாலையில் பள்ளம்:-

சிறு சேதங்கள்

5, மாநகர  பேருந்து போக்குவரத்து மாற்றம்:-

a)    சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளை சென்னையிலிருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஸ்டராகான்ஸ் சாலை சந்திப்பில் இருந்து திருப்பி விடப்பட்டு, ஓட்டேரி வழியாக பெரம்பூர் மார்கமாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

b)    சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளை புளியந்தோப்பிலிருந்து சென்னையை நோக்கி கணேசபுரம் சுரங்கப்பாதை  வழியாக வரும் வாகனங்களை அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு, பெரம்பூர் மேம்பாலம் வழியாக ஜமாலியா ரோடு, ஓட்டேரி,  அயனாவரம்  செல்வதற்கு வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

6,  மரங்கள் விழுந்து அகற்றும் பணி:-  ஏதும் இல்லை என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: