×

சென்னை மாநகரில் 100% முழுமையாக மின்விநியோகம் கொடுக்கப்பட்டு வருகின்றன: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: சென்னை மாநகரில் 100 சதவீதம் முழுமையாக மின்விநியோகம் கொடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மின் விநியோகம் தொடர்கிறது. தமிழகம் முழுவதும் 40,000 மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மின் விநியோகம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

சென்னையியல் 2,700 பில்லர் பாக்ஸ் தரையில் இருந்து ஒரு மீட்டர் உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்றிரவு 2 இடங்களில் மின்பாதிப்பு ஏற்பட்டது; 10 நிமிடங்களிலேயே சரிசெய்யப்பட்டது. 5,000 கி.மீ. மின்கடத்தி கம்பிகள் இருப்பில் உள்ளன; 2 லட்சம் மின்கம்பங்கள் தயாராக உள்ளன என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளதால் மின் பாதிப்பு ஏற்படாது. மின் விநியோகம் சீராக இருப்பதால் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் குறைவாகவே உள்ளன என்று தெரிவித்தார்.

Tags : Chennai ,Minister ,Senthil Balaji , Chennai, Electricity Distribution, Minister Senthil Balaji
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை...