மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் உள்பட 5 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

சென்னை : மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் உள்பட மேலும் 5 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் உள்பட மேலும் 5 திருக்கோயில்களில் விரிவாக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் முதுநிலை திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 2021-2022ம் ஆண்டில் சட்டப்பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து முதற்கட்டமாக, 10 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

2022-2023ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, ஏற்கனவே 10 திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது, அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி, ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், நாமக்கல், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்  விரிவுப்படுத்தப்படும்என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இத்திட்டத்தினை மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி, ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், நாமக்கல், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி மூலமாக அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், இ,ஆ,ப,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் எம்.கவிதா, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பி.விஜயகுமார் ரெட்டி, உறுப்பினர்கள் ப.திருநாவுக்கரசு, சி.டி.ஆறுமுகம், எம்.பி.மருதமுத்து, இணை ஆணையர் திருப்பணி பொ.ஜெயராமன், திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் த.காவேரி மற்றும் அலுவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: