தீபாவளி வாழ்த்து கூறிவிட்டு மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை

உஜ்ஜைனி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி அடுத்த கஸ்தூரி பாக்கில் மருந்து விற்பனை பிரதிநிதி ஜெய்தீப் (27) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தனது நண்பர்களுக்கு போனில் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். அன்றிரவு முழுவதும் நண்பர்களுடன் நீண்ட நேரமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் வீட்டின் அறையின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சிமாங்கஞ்ச் மண்டி போலீசார், ெஜய்தீப்பின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹகம் சிங் நாயக் கூறுகையில், ‘தற்கொலை செய்து கொண்ட ஜெய்தீப்புக்கு விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அவரின் நண்பர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Related Stories: