டெல்லி காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: விபத்தில் சிக்கி ஊழியர்கள் 2 பேர் உடல் கருகி உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். நரேலா தொழில் நகரத்தில் உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் வைக்கப்பட்டு இருந்த தீ பற்றக்கூடிய பொருட்களுக்கு நெருப்பு பரவியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து 10 வாகனங்களில் வந்த டெல்லி தீயணைப்பு அதிகாரிகள் தீயை அணைக்க தீவிரமாக போராடினர்.

மற்றோரு குழுவினர் தீயில் சிக்கிக்கொண்ட 3 ஊழியர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 3 மணி நேரம் கடுமையாக போராடிய தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து நரேலா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: