கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

கம்பம்: மாவட்டத்தில் கூடலூர் தொடங்கி வீரபாண்டி வரை மொத்தம் 14 ஆயிரத்து 700 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த வருடம் ஜூன் முதல் தேதி தமிழக அரசு பெரியாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு விவசாயத்துக்காக தண்ணீர் திறந்து விட்டது. தென் மேற்கு பருவமழையாலும், குறிப்பிட்ட நேரத்தில் பெரியாறு அணையில் நீர் திறக்கப்பட்டதாலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் மொத்தம் உள்ள 11,807 ஏக்கர் பரப்பளவில் நெல் விளைச்சல் அமோகமாக உள்ளது.

இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போகம் பயிரிட்ட நெற்கதிர்களை இயந்திரம் உதவியுடன் அறுவடை செய்யும் பணிகள் தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் போக சாகுபடி அறுவடை பணிகள் முடிந்ததும், இரண்டாம் கட்ட சாகுபடிக்கான பணிகளை தொடங்க தயாராக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: