×

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை!: கத்திவாக்கம், தண்டையார்பேட்டையில் 16 செ.மீ. மழை பதிவு.. களத்தில் 20,000 மாநகராட்சி பணியாளர்கள்..!!

சென்னை: சென்னையில் கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் 1ம் தேதி 8 செ.மீ. மழை பதிவானது இது மூன்றாவது முறை என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் லேசான மழை பெய்த நிலையில் தற்போது சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திவாக்கம், தண்டையார்பேட்டை 16 செ.மீ. மழை:

சென்னை கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகரில் தலா 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மணலி 15 செ.மீ., கொளத்தூர், அண்ணாநகரில் தலா 13 செ.மீ., பெரியமேடு 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டையில் தலா 10 செ.மீ., ராயபுரம், கோடம்பாக்கத்தில் தலா 9 செ.மீ. மழை பொழிந்துள்ளது. மதுரவாயல் 8 செ.மீ., ஆலந்தூர், அடையாறில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல் அம்பத்தூர், வளசரவாக்கத்தில் தலா 6 செ.மீ. மழை பொழிந்துள்ளது.

மழை: களத்தில் 20,000 பணியாளர்கள்

சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். மழை நீர் தேங்குவதை அகற்ற 20,000 பணியாளர்களை களமிறக்கியுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 200 வார்டுகளில் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் என 20,000 பேர் களத்தில் உள்ளனர். மழைநீர் தேங்காமலும், வழக்கமான பணிகள் பாதிக்காமல் இருக்கவும் களத்தில் பணியாற்றி வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Tags : Chennai ,Kathivakkam ,Thandaiyarpet , Chennai, heavy rain, 16 cm. Rains, 20,000 Corporation employees
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...