×

ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பானில் களைகட்டிய ஹலோவீன் திருவிழா: பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உற்சாகமாக பங்கேற்பு

தென்கொரியா: தென்கொரியாவில் 153 பேர் கூட்ட நெரிசலில் மரணம் அடைந்த போதும் ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் வழக்கம் போல களைகட்டின. பேய்கள் திருவிழா அல்லது பூச்சாண்டிகளின் திருவிழா என்று அழைக்கப்படும் ஹாலோவீன் திருவிழா ஜெர்மனியில் உள்ள மிஸ்ட்டல் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேய்கள், பூதங்கள், சூனியக்காரர்கள், ஜம்பிகள் எனப்படும் நடமாடும் பிணங்கள் உள்ளிட்ட உருவங்களில் பொதுமக்கள் தங்களை அலங்காரம் செய்து கொண்டனர். இந்த விழாவில் குழ்நதைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பங்கேற்றனர்.

ஜப்பான் தங்கர் டோக்கியோவில் நடைபெற்ற ஹாலோவீன் திருவிழாவில் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். அண்டை நாடான தென்கொரியாவில் 150-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த போதும் ஜப்பானில் இந்த ஆண்டு பேய்கள் திருவிழா கொண்டாட்டத்தில் உற்சாகம் குறையவில்லை. உக்ரைனில் கீவ் நடைபெற்ற ஹாலோவீன் விழாவில் ரஷ்ய அதிபர் புதினை பேய்யை போல் உருவகப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி ஹாலோவீன் தினமாக கொண்டாடி வருகின்றன.

அகாலமாக இறந்து போனவர்கள் சொர்க்கத்திற்கு போகாமல் நரகத்திற்கும் செல்லாமல் அலைந்து கொண்டு இருப்பவர்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும். அலைந்து கொண்டு இருக்கும் ஆன்மாகளை சந்தோசப்படுத்து நாளை தான் ஹாலோவீன் நாளாக உலக நாடுகளில் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்த பேய்கள் தினம் அல்லது பூச்சாண்டி தினம் வர்த்தக நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.அமெரிக்காவின் பல இடங்களில் ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் ஹாலோவீன் திருவிழாவில் பங்கேற்றார். இதற்காக வெள்ளை மாளிகை வளாகம் வித்யாசமான முறையில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வினோதமாக உடை உடுத்தி வந்த சிறுவர், சிறுமிகளுக்கு சாக்லேட்டுகளை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளிப்படுத்தினர்.    


Tags : Weed Halloween Festival ,Germany ,USA ,Japan , In Germany, America, Japan, Halloween, festival, adults, children, participation
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!