நகராட்சி நிர்வாகத்துறை வழிகாட்டு குழுவில் வணிகர்கள் நியமனம்; விக்கிரமராஜா வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்  ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு நகராட்சி நிர்வாகம்  மற்றும் குடிநீர் வழங்கள் துறை நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி  கடைகளுக்கான வாடகை முரண்பாடு, பெயர் மாற்றம், புதிய கடைகள் ஒதுக்கீடு,  சம்பந்தமாக இருந்துவரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண ‘‘வழிகாட்டுதல்  குழு’’அமைத்து, அக்குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பிரதிநிதிகளாக மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, வேலூர் மாவட்டத் தலைவர் ரா.ப.ஞானவேலு ஆகியோரை நியமனம் செய்துள்ளது. எனவே,  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துறைசார்ந்த அமைச்சர்களுக்கும் தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்  நன்றியை தெரிவித்து கொள்கிறது.

Related Stories: