தனது வாகனத்தில் சிக்கி இறந்த பெண்; நிருபரின் வீட்டுக்கு சென்று இம்ரான் ஆறுதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வாகனத்தில் சென்றபோது தவறிவிழுந்து உயிரிழந்த பெண் பத்திரிக்கையாளர் குடும்பத்தை சந்தித்து இம்ரான் ஆறுதல் கூறினார். பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தி வருகின்றார். தனது கோரிக்கையை வலியுறுத்தி இஸ்லாமாபாத் நோக்கி இம்ரானின் பாகிஸ்தான் ெதக்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பாக நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியின்போது இம்ரானின் வாகனத்தில் சென்ற பெண் பத்திரிக்கையாளர் சதாப் நையீம் என்பவர் தவறி விழுந்தார். இதில் வாகனம் அவர் மீது ஏறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், இம்ரான் கான் நேற்று உயிரிழந்த நையீம் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். நையீம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த பயங்கரமான சம்பவத்தை குறித்த எனது வேதனையை கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்தார். பிரதமர் ஷெபாஷ் செரீப்பும் இந்த சம்பவத்துக்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Related Stories: