ஆண்டு முழுவதும் கோயில்களில் அன்னதான திட்ட நிகழ்ச்சி தொடக்கம்; அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

அம்பத்தூர்: தனிப்பெருங்கருணை நாளையொட்டி ஆண்டு முழுவதற்குமான அன்னதான திட்ட துவக்க நிகழ்ச்சி கொரட்டூரில் உள்ள ஸ்ரீபாடலாத்திரி ஏரிக்கரை சீயாத்தம்மன் ஆலய  மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசு  சார்பில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் மற்றும் அம்பத்தூர்  எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு வள்ளலார் உருவத்திற்கு  திருவாசகம் பாடி மரியாதை செய்து அன்னதான திட்டத்தை  துவக்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து சமபந்தி உணவு அருந்தினர்.

அதில்  சர்க்கரை பொங்கல், பருப்பு பாயாசம் சாப்பாடு, சாம்பார், ரசம்,  கார குழம்பு, மோர், பொரியல், கூட்டு, பருப்பு துவையல், மெது அடை, அப்பளம், ஊறுகாய்  உள்ளிட்ட 13 வகையான உணவு வகைகள் இந்த ஆண்டு முழுவதற்குமான அன்னதான  திட்டத்தில் அடங்கும். நிகழ்சியின் துவக்கமாக வாரத்தில் 3  நாட்களுக்கும் இதை தொடர்ந்து வரும் காலத்தில்  இந்து சமய அறநிலையத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் வாரத்தில் 7 நாட்களுக்கும் சுமார் 150  பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலைய துறை சார்பில்  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அன்னதான  துவக்க விழா நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி 83வது வார்டு மாமன்ற  உறுப்பினர் உஷா நாகராஜ், அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: