தீபாவளிக்கு சிறப்பாக செயல்பட்ட 17 பணியாளர்களுக்கு கார் பரிசு; ஜி ஸ்கொயர் வழங்கியது

சென்னை: மனைகள் உருவாக்க தொழிற்பிரிவில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மிகப்பெரிய நிறுவனம் ஜி ஸ்கொயர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர், மைசூர்  மற்றும் பல்லாரி ஆகிய நகரங்களில் 800 பணியாளர்களுடன் ஜி ஸ்கொயர் நிறுவனம் இயங்கி வருகிறது. தீபாவளி திருவிழாவை வித்தியாசமான முறையில் வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த நிகழ்வாக, தனது நிர்வாக பணியாளர்களுக்கு மாற்றி இருக்கிறது ஜி ஸ்கொயர். அந்த வகையில், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வெளிப்படுத்தியிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வுக்காகவும், ஆற்றியிருக்கும் கடுமையான உழைப்பிற்காகவும் பாராட்டையும், அங்கீகாரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக 17 பணியாளர்களுக்கு ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் கார்களை பரிசாக வழங்கியிருக்கிறது. இதில், பிஎம்டபிள்யூ 520 டி எம்ஸ்போர்ட், கியா கேரென்ஸ், போக்ஸ்வேன் விர்டஸ், கியா செல்டோஸ், கியா சானெட், ஹூண்டாய் கிரேட்டா, மாருதி எக்ஸ்எல்6 மற்றும்  மாருதி எர்டிகா ஆகிய கார்களும் அடங்கும்.

இது குறித்து ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைமை செயலாக்க அதிகாரி என்.ஈஸ்வர் கூறுகையில், ‘தென்னிந்தியாவின் மிகப்பெரிய பிளாட் புரமோட்டர் நிறுவனம் என்ற முதன்மை நிலையை எங்கள் நிறுவனம் எட்டி இருப்பதற்கு பணியாளர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. நிறுவனத்தின் தொலைநோக்கு திட்டத்தோடு இணக்கமானதாக பணியாளர்களின் செயல்பாடும் இருப்பதால், இனிவரும் ஆண்டுகளில் இன்னும் பல மைல்கற்களை கடந்து உயர் சாதனைகளை அவர்கள் நிகழ்த்துவார்கள் என்பது நிச்சயம். இனிவரும், ஆண்டிலும் வருடாந்திர அடிப்படையில் நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாக கார் வெகுமதி திட்டம் இருக்கும். அடுத்த நிகழ்வின்போது சிறப்பாக செயலாற்றி இருக்கும் முதன்மையான 40 திறன்மிக்க பணியாளர்களுக்கு கார்களை பரிசாக வழங்க திட்டமிட்டு வருகிறோம் என்றார்.

Related Stories: