கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை கடலில் குளித்த கல்லூரி மாணவன் பலி; மற்றொரு மாணவன் மாயம்

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை அக்கரை கடலில் குளித்த கல்லூரி மாணவன் அலையில் சிக்கி பலியானார். மற்றொரு மாணவனை காணவில்லை.

தேவகோட்டை, ராம் நகர், சிவகங்கை ராஜா சாலையைச் சேர்ந்தவர் திலக்சன் (19). இவரது நண்பர் நாகப்பட்டினம் பொறையூர், மருத்துவமனை தெருவை சேர்ந்த வர் சஞ்சித் (19). இருவரும் சென்னை ராஜிவ் காந்தி சாலை செம்மஞ்சேரியில்  உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சி.எஸ்.இ. இரண்டாம் ஆண்டு படித்து  வந்தனர். நேற்று முன்தினம் நண்பர்களான சுரேஷ், விஷால், கில்பட், சடகோபன்  ஆகியோருடன் கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள கடற்கரைக்கு  சென்றுள்ளனர்.

அங்கு அனைவரும் கடலில் குளித்துள்ளனர். இதில் திலக்சன்  மற்றும் சஞ்சித் இருவரும் ராட்ச அலையில் சிக்கி உள்ளே இழுத்துச்  செல்லப்பட்டனர். இதை பார்த்த நண்பர்கள் கூச்சல் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு வந்த மீனவர்கள்  இருவரையும் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து, நீலாங்கரை  காவல் நிலையத்தில் சடகோபன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கானத்தூர் கடற்கரையில் திலக்சன் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: