×

திருத்தணி முருகன் கோயிலில் உயிரிழந்த மயில்: பிரேத பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பி வைப்பு

சென்னை: திருத்தணி முருகன் கோயிலில் உயிரிழந்த மயில் பிரேத பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருத்தணி முருகன் மலைக்கோயிலில் காவடி மண்டபம் எதிரே கடந்த, 2017 ம் ஆண்டு ஒரு வயதான இரண்டு ஆண் மயில்கள் மற்றும் ஒரு பெண் மயில் என மொத்தம் மூன்று மயில்களை கோயில் நிர்வாகம் வளர்த்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், மாலை ஆண் மயில் திடீரென உடல்நலம் குன்றிய நிலையில் இருந்துள்ளது. கந்த சஷ்டி விழாவின் 5-ம் நாளான நேற்று புஷ்பாஞ்சலி என்பதால் கோயில் ஊழியர்கள் கூண்டில் உள்ள மயில்களை கண்காணிக்காமல் அலட்சியமாக இருந்தனர்.

இரவு திடீரென உடல் நலம்குன்றி ஆண் மயில் பரிதாபமாக இறந்தது. கோயில் நிர்வாகம் உரிய முறையில் மயில்களுக்கு உணவு வழங்கி பராமரிக்காததால் ஆண் மயில் இறந்ததாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தற்போது கூண்டில் இருக்கும் இரு மயில்களை காப்பாற்ற வேண்டும் என பக்தர்கள் கோருகின்றனர். இந்நிலையில், நேற்று இறந்த ஆண் மயிலை கோயில் ஊழியர்கள், வனத்துறையினர் கார் மூலம் திருத்தணி கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்து தருமாறு கால்நடை உதவி இயக்குனரிடம் தெரிவித்தனர். அங்கு  மயிலை பிரேத பரிசோதனை செய்வதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால் சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய பல்கலைக் கழக ஆராய்ச்சி கூடத்திற்கு இறந்த மயிலை அனுப்பி வைத்தனர்.

Tags : Peacock ,Tiruthani Murugan Temple ,Chennai , Peacock died in Tiruthani Murugan Temple: Sent to Chennai for post-mortem
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை...