வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளும், குடிநீர் வடிகால் வாரியத்தின் பணிகளும், மின்சார வாரியத்தின் பணிகளும், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கூடுதலாக ஆட்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்ய வேண்டும்.

Related Stories: