×

குஜராத் விபத்து குறித்து விரிவாக விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மாச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 130க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. மார்ச் மாதம் முதல் 7 மாதங்கள் நடைபெற்ற பராமரிப்பு பணிகளுக்குப் பிறகு கடந்த 26ம் தேதி தான் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.அடுத்த 4 நாட்களில் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் இடிந்து விபத்துக்குள்ளாவதை தடுப்பதற்கான பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்க வேண்டும்.


Tags : Anbumani ,Gujarat accident , Anbumani insists on a detailed inquiry into the Gujarat accident
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...