×

அள்ள அள்ள குறையாத ஆயுதங்கள் ராக்கெட் லாஞ்சர்களை தொடர்ந்து 3 வெடி பொருட்கள் கண்டெடுப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைப்பு; போலீசார் விசாரணை

சென்னை: செங்கல்பட்டு அருகே 3 ராக்கெட் லாஞ்சர்களை தொடர்ந்து 3 வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றை செயலிழக்க வைக்க வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் காப்பு காடு உள்ளது. இந்த காட்டின் மைய பகுதியில், 30 வருடங்களாக துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் இயங்கி வந்தது. இந்நிலையில், வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் விவசாய நிலங்களில் கிடப்பதாக ஆடு, மாடு மேய்பவர்கள், மறைமலைநகர் போலீசாருக்கு சமீபத்தில் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, கூடுதல் ஆணையர் சிங்காரவேலன் தலைமையில் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், 3 ராக்கெட் லாஞ்சர்களை பறிமுதல் செய்தனர். அவற்றை செயலிழக்க வைப்பதற்காக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்தவர்கள், வழக்கம் போல ஆடு, மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டபோது, 3 வெடிபொருட்கள் கிடப்பதை பார்த்தனர். உடனே மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் தாம்பரம் மாநகர காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 3 வெடி பொருட்களையும் பாதுகாப்புடன் மீட்டனர். அவற்றை பாதுகாப்பாக மலை பகுதியிலேயே பள்ளம் தோண்டி, அவற்றை சுற்றி பாதுகாப்பாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் வந்ததும் அவற்றை செயலிழக்க வைப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள், விளை நிலங்களில் விழும்போது, அவற்றை எதிர்பாராமல் சிலர் மிதித்தால் வெடித்து காயம் ஏற்படுகிறது. இந்த ராக்கெட் லாஞ்சர் சக்தி வாய்ந்தது என்பதால் பாதிப்பு அதிகமாக இருக்கும். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் வெடிக்காத லாஞ்சர் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவற்றை கண்டுபிடித்து வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் செயலிழக்க வைக்க உள்ளோம். மேலும், துப்பாக்கி சுடும் தளத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க இருக்கிறோம். அப்பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் பெயர் பலகை வைக்க உள்ளோம். எனவே பொதுமக்களுக்கு இனிமேல் பதற்றம் அடைய வேண்டாம்.’’ என்றனர்.

Tags : 3 Explosive Ordnance Discovery followed by Missile Ordnance Rocket Launchers: Call in bomb experts; Police investigation
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...