×

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி

பிரிஸ்பேன்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய அயர்லாந்து அணி 137 ரன்னில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 28 ரன்கள், கிளென் மேக்ஸ்வெல் 13 ரன்கள் எடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 35 ரன்கள் அடித்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ஆரோன் ஃபின்ச் 63 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்களை குவித்தது.

180 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணி 18.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஜாம்பா, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

Tags : T20 World Cup ,Australia ,Ireland , T20 World Cup: Australia beat Ireland by 42 runs
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...