×

சென்னையில் இருந்து சீரடி, நாசிக் செல்லும் விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து மராட்டிய மாநிலம் சீரடி, நாசிக் செல்லும் 2 விமானங்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து செல்லும் மற்றும் திரும்பி வரும் விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை - சீரடி பிற்பகல் 2.40 மணி விமானம், சீரடி - சென்னை மாலை 4.50 மணிக்கு புறப்படும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை - நாசிக் இரவு 7.10 மணிக்கு புறப்படும் விமானம், நாசிக் - சென்னை இரவு 9.20க்கு புறப்படும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Sirdi ,Nashik , Flights from Chennai to Sirdi and Nashik have been cancelled
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!