டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வென்றது ஆஸ்திரேலியா

பிரிஸ்பேன்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. பிரிஸ்பேன்சில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய அயர்லாந்து அணி 137 ரன்னில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

Related Stories: