3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா திரும்பும் பிரியங்கா சோப்ரா

மும்பை: கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குழந்தையுடன் பிரியங்கா சோப்ரா முதன் முறையாக இந்தியா திரும்ப உள்ளதால் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று கலக்கி வரும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவன் நிக் ஜோனாஸ் மற்றும் மகள் மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் உடன் அமெரிக்காவில் வசித்தார்.

கிட்டதட்ட 3 ஆண்டுகளாக வௌிநாட்டில் தங்கியிருந்த அவர், விரைவில் இந்தியா வரவுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு எனது சொந்த வீட்டிற்கு (நாடு) செல்கிறேன்’ என்று பதிவிட்டு தனது போர்டிங் பாஸின் படத்தை பகிர்ந்துள்ளார்.

மூன்று ஆண்டுக்கு பின்னர் பிரியங்கா சோப்ரா மும்பை வரவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பிரியங்கா சோப்ராவின் மகள் மால்டி மேரி சோப்ரா, முதல் முதலாக இந்தியா வரவுள்ளதால் பாலிவுட் பிரபலங்களும் அவரை வரவேற்க தயாராக உள்ளனர்.

Related Stories: