×

தளி அருகே குட்டையில் குளித்து யானைகள் குதூகலம்: வனத்துறையினர் கண்காணிப்பு

ஓசூர்: கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த யானைகள், தளி அருகே குட்டையில் ஆனந்த குளியல் போட்டு கும்மாளமிட்டன. இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 150க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இடம் பெயர்வு கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. இதுவரை 70க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து, ஜவளகிரி வனச்சரக பகுதியில் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன.

யானைகளின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம், ஜவளகிரி வனச்சரகர் சுகுமாரன் தலைமையிலான வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள், வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்கவோ, ஆடு மாடு மேய்க்கவோ செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, தளி அருகே சிக்கனநாயக்கன் குட்டையில் யானைகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தன. அதை வனத்துறையினர் ட்ரோன் மூலம் படம் பிடித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கர்நாடக வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள யானைகள், பன்னார்கட்டா வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளது.

சில யானைகள் குழுவாக பிரிந்து, தளி அருகே குட்டையில் குளித்து மகிழ்ந்து வருகின்றன. அருகில் உள்ள வனப்பகுதிக்கு, அந்த யானைகள் செல்லும் நிலை உள்ளதால், கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,’ என்றனர். 


Tags : Tuli , Elephants bathe in a puddle near Thali: Forest department surveillance
× RELATED ஹீரோவாகும் இயக்குனர் முத்தையா மகன்