கோவை கார் வெடிப்பில் தமிழக காவல்துறை நடவடிக்கையில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன குறை கண்டார் என்று முரசொலி நாளிதழில் கேள்வி

சென்னை : கோவை கார் வெடிப்பில் தமிழக காவல்துறை நடவடிக்கையில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன குறை கண்டார் என்று முரசொலி நாளிதழில் கேள்வி எழுப்பியுள்ளது. ஆளுநர் பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது என்றும் அந்த நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது. கார் வெடிப்பு சம்பவம் நடந்த 3-வது நாளே தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு முதலமைச்சர் மாற்றிவிட்டதாகவும், இதில் தாமதம் ஏதும் நடக்கவில்லை என்றும் முரசொலி நாளிதழ் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் நடந்த வெடி விபத்து உள்ளிட்ட பல வழக்குகள் என்.ஐ.ஏ.க்கு தாமதமாக மாற்றப்பட்டது அதன் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி விடுதி திறப்பு விழாவில் ஆளுநர் இந்த கேள்வியை எழுப்பியிருப்பது முறைதானா? என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் இறந்த தகவல் அறிந்த உடனேயே காவல்துறை துரிதமாக செயல்பட்டு மறுநாளே 5 பேரை கைது செய்து ஏற்பதாகவும் அதில் குறிப்பிடப்படுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் இத்தனை ஆண்டுகள் கழித்து பாஜக அரசு 2019-ம் ஆண்டு கால தாமதமாக திருத்தம் செய்தது ஏன் என்பதும் முரசொலியின் கேள்வி. பாஜக ஆட்சியில் அந்த சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வந்தபோது திமுக அதை ஆதரிப்பதை சுட்டிக்காட்டிருக்கும் நாளிதழ் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் திமுக-வும், அரசும் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே, ஆளுநர் பொதுவெளியில் இதுபோல பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ள முரசொலி அவர் இன்னொரு அண்ணாமலையாக ஆகா வேண்டாம் தமிழக பாஜக தாங்காது என்றும் எச்சரித்துள்ளது. 

Related Stories: