×

56 சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடக் கூடாது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு

பெரம்பலூர் : பெரம்பலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சுங்க சாவடி ஊழியர்கள் 56 பேருக்கு நியாயம் கிடைக்க அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அடுத்த திருமாந்துறை மற்றும் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் இருந்து 56 ஊழியர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்து ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் 30-வது நாளை எட்டியுள்ளது.  அவர்களது போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு அள்ளித்தர். பின்னர் பேட்டி அளித்த அவர் 56 ஊழியர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட கூடாது என்று தெரிவித்தார். 56 ஊழியர்களுக்கும் நீதி கிடைக்க அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சுங்கச்சாவடி ஊழியர்கள் 56 பேரை தெருவில் நிறுத்தும் டிடிபிஎல் நிறுவனத்தின் செயல் தோல்வி அடையும் என்று திருமாவளவன் குறிப்பிட்டார். ஊழியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மாற்றாக புதிய ஊழியர்களை டிடிபிஎல் நிறுவனம் நியமித்து வருவதால் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.         


Tags : TU ,Leadership Leopards Party ,Thirumavalavan , Tollbooth, Employee, Justice, Struggle, Thirumavalavan, Speech
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு