சிபிசிஐடி, சிறைத்துறை டிஜிபிக்கள் 2 பேர் இன்று ஓய்வு; ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடக்கிறது

சென்னை: தமிழக சிபிசிஐடி டிஜிபியாக ஷகில் அக்தர் உள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான இவரது, பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. அதேபோல, சிறைத்துறை டிஜிபியாக சுனில்குமார் சிங் உள்ளார். இவரது பதவிக்காலமும் இன்றுடன் முடிகிறது. சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், பீகார் மாநிலம் டர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1962ம் ஆண்டு பிறந்த இவர், 1989ம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். இவர், பெங்களூர் சென்று கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய கைதிகளை சுட்டுக் கொன்ற தனிப்படைக்கு தலைமை வகித்தவர்.

 

அதேபோல, சிறைத்துறை டிஜிபியாக உள்ள சுனில்குமார் சிங், 1988ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். இவரது சொந்த ஊர் பாட்னா. இவர்கள் இருவரும் ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். இருவருக்கும் இன்று மாலை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் காவல்துறை அணிவகுப்புடன் பிரிவு உபசார விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து ெகாள்கின்றனர்.

Related Stories: