×

வட கிழக்கு பருவமழையால் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: வட கிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை  விடை பெற்றதை அடுத்து, தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை 29ம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தெற்கு இலங்கை மற்றும் வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதியில் காற்று சுழற்சி நேற்று முன்தினம் உருவானது. அதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதி மற்றும் குமரிக் கடல் பகுதியில் 29ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக ஒகனேக்கல் பகுதியில் 50மிமீ மழை பெய்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, அரியலூர், கன்னியாகுமரி உள்பட 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.

மேலும், உள் தமிழகம், கேரளா, தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இலங்கையில் தென் பகுதி, தமிழக கடோரப் பகுதியில் குமரிக் கடல் முதல் தெற்கு ஆந்திரா வரையிலான கடல் பகுதியில் வளிமண்டல காற்று சுழற்சி பரவியுள்ளது. அதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப் பேட்டை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதே நிலை நவம்பர் 3ம் தேதி வரை நீடிக்கும்.



Tags : North East , Heavy rains will occur in 16 districts today due to North East Monsoon
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...