விரைவில் அரசியலுக்கு வருகிறார் நடிகை நமீதா; திருப்பதியில் அறிவிப்பு

திருமலை: ‘விரைவில் அரசியலுக்கு வருவேன்,’ என நடிகை நமீதா கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை நமீதா தனது குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்து வைத்து, ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர், கோயிலுக்கு வெளியே வந்த நமீதாவுடன் அவரது ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பின்னர், நமீதா அளித்த பேட்டியில், ‘திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது குழந்தைகள் தற்போது நலமாக உள்ளனர். எனவே, கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக வந்தேன்.  படத்தில் நடிப்பதை காட்டிலும் அரசியலில் எனக்கு ஆர்வம் உள்ளது. எனவே, விரைவில் அரசியலுக்கு வருவேன். அதுவரை காத்திருங்கள்,’ என்றார்.

Related Stories: