×

ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள், தலைமை நீதிபதியிடம் மம்தா கோரிக்கை

கொல்கத்தா: ‘ஜனநாயகத்தின் அனைத்து அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் முடக்கப்படுவதால், அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு செல்கிறது,’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.  இதில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், மம்தா பேசியதாவது: நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகள் அனைத்தின் அதிகாரங்களும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால், நாட்டில் அதிபர் ஆட்சி முறை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.  நாடு அதை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது. ஒன்றிய கூட்டாட்சி கட்டமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதை தலைமை நீதிபதி உறுதிபடுத்த வேண்டும். பதவிக்கு வந்த 2 மாதங்களில் நீதித்துறை என்றால் என்ன என்று காட்டி விட்டீர்கள். நீதிமன்றத்தின் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், தற்போதைய சூழல் மிக மோசமாக உள்ளது. மக்களின் அழுகுரலைக் கேட்டு, நீதிமன்றங்கள் அநீதியில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Mamata ,Chief Justice , Save Democracy, Mamata Requests Chief Justice
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்