பாஜவில் இணைந்த பிறகு தேர்தலில் போட்டியிட கங்கனா விருப்பம்

சிம்லா: பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர், நடிகை கங்கனா ரனவத். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வரும் அவர், தற்போது அரசியலில் ஈடுபட விருப்பம் தெரிவித்து, வரும் லோக்சபா ேதர்தலில் பாஜ சார்பில் போட்டியிட தயார் என்று அறிவித்து உள்ளார். ஆனால், அவரது கருத் துக்கு ஜெ.பி.நட்டா பதிலளிக்காமல், அதை கட்சியின் தேர்தல் பணிக்குழுமுடிவு செய்யும் என்று சொன்னார்.

இமாச்சலப் பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஆளும் பாஜ தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாஜ இடையே இருமுனை போட்டி நிலவும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. இதற்கிடையே மண்ணின் மகளான கங்கனா ரனவத், பாஜவில் சேர விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஒரு தனியார் டி.விக்கு அளித்த பேட்டியில், ‘நடிகை கங்கனா ரனவத் பாஜவில் இணைய விரும்புவதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் 2024 மக்களவை தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமையுடன் ஆலோசனைகள் நடத்திய பிறகே முடிவு செய்யப்படும். இப்போது எனது தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க முடியாது. அதை மத்திய தேர்தல் பணிக்குழு முடிவு செய்யும்’ என்று சொன்னார். முன்னதாக நேற்று முன்தினம் கங்கனா ரனவத் அளித்த பேட்டியில், ‘பொதுமக்கள் விரும்பினால் மட்டுமே  அரசியலில் ஈடுபடுவேன். பாஜ எனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கினால், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறேன்’ என்றார். இதையடுத்து, லோக்சபா தேர்தலில் பாஜ சார்பில் கங்கனா ரனவத் தேர்தல்  பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று தெரிகிறது.

Related Stories: