நெதர்லாந்து அணியை பந்தாடியது பாகிஸ்தான்

பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த உலக கோப்பை சூப்பர் 12 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 91 ரன் எடுத்தது. கோலின் ஆக்கர்மேன் 27 ரன், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷதாப் கான் 3, முகமது வாசிம் 2, ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ராவுப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 13.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. ரிஸ்வான் 49 ரன் (39 பந்து, 5 பவுண்டரி), கேப்டன் பாபர் 4, பகார் ஸமான் 20, ஷான் மசூத் 12 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். இப்திகார் 6 ரன், ஷதாப் கான் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷதாப் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: