அபியர்டோ ஓபன் எலிசபெத்தா சாம்பியன்

டாம்பிகோ: மெக்சிகோவில் நடைபெற்ற அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இத்தாலி வீராங்கனை எலிசபெத்தா கோக்சியரெட்டோ முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் போலந்தின் மாக்தா லினெட்டுடன் (30 வயது, 55வது ரேங்க்) மோதிய எலிசபெத்தா (21 வயது, 79வது ரேங்க்) 7-6 (7-5), 4-6, 6-1 என்ற செட் கணக்கில் 2 மணி, 31 நிமிடம் போராடி வென்றார். இது எலிசபெத்தா வென்ற முதல் டபுள்யு.டி.ஏ 125 அந்தஸ்து சாம்பியன் பட்டமாகும். இந்த தொடரில் அவர் 4 முன்னணி வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: