×

போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செலவாகும்: பொறியியல் துறை அறிக்கை தாக்கல்

கொழும்பு: இலங்கை அதிபரின் மாளிகைக்குள் புகுந்து மக்கள் போராட்டம் நடத்தியதால், தற்போது அந்த மாளிகையை சீரமைக்க ரூ. 8.17 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடந்த ஜூலையில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்தின் போது, அந்நாட்டு அதிபர் மாளிகைக்குள் புகுந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கிருந்த ெபாருட்கள் சூறையாடப்பட்டன. அதன்பின் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் பல பொருட்களை சேதப்படுத்தியதால், அதனை சீர் செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக பொறியியல் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசிடம் சமர்பித்த அறிக்கையில், ‘அதிபர் மாளிகையை புனரமைக்க சுமார் 364.8 மில்லியன் (இந்திய ரூபாயில் 8.17 கோடி) செலவாகும் என்றும், அதிபர் மாளிகையின் வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள், வாகனங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும், சீரமைப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டத்தின் சீரமைப்பு பணியின் போது, மாளிகையின் தங்குமிடங்கள் மற்றும் அலுவலக அறைகள் புனரமைக்கப்படவுள்ளன என்றும், அதற்காக அரசின் பொது நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Tags : Sri Lanka Chancellor House ,Engineering Department , Protesters, Sri Lankan President's House, cost Rs 8.17 crore, engineering department reports
× RELATED 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்...