×

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், லட்சுமி நாராயணன், சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன் ஆகியோரிடம் சோதனை நடத்த சிறப்பு புலன்  விசாரணை குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கடத்த பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ராமஜெயம் மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கிளை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். அந்த வழக்கில் தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையானது நடத்தப்பட்டது. இருந்த போதும் கொலையாளிகள் குறித்த விபரம் தெரியவில்லை.

இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில் தமிழகம் முழுவதும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து 20 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஆலோசனை செய்யப்பட்டது. தற்போது 12 பேரிடம் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், லட்சுமி நாராயணன், சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன் ஆகியோரிடம் சோதனை நடத்த உள்ளதாக சிறப்பு புலன் விசாரணை குழு கூறியுள்ளனர்.

இந்த 12 பேரையும் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி பெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Minister ,K. N.N. ,Nehru ,Ramazeam , Minister KN Nehru, Ramajayam murder case, famous raiders, fact-finding probe
× RELATED நான் யாரிடமாவது ஆதாயம்...