×

போக்குவரத்து விதி மீறியதாக சென்னையில் கடந்த 3 நாட்களில் 6,187 மீது போலீஸ் வழக்கு பதிவு: புதிய சட்டத்தின்படி ரூ.42 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி சென்னை மாநகரம் முழுவதும் கடந்த 3 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 6,187 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.45 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர். பழைய மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து ஒன்றிய அரசு, திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்தது. அதனடிப்படையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி புதிய அபராத கட்டணங்கள் வசூலிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 19ம் தேதி வெளியிட்டது.

அதில், முதல் முறை செய்யும் சாலை விதிமீறலுக்கு ஒரு அபராதம் கட்டணம், அதே விதிமீறலை மீண்டும் செய்தால் அதற்கு கூடுதலான ஒரு அபாதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசிக்கொண்டே சென்றால் திருத்தப்பட்ட ேமாட்டர் வாகன சட்டத்தின் படி ரூ-1000 அபராமும், அதே விதிமீறலில் இரண்டாவது முறை ஈடுபடுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் என பல்வேறு விதிமீறல்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின் படி புதிய அபராத தொகை கடந்த 26ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, முதல் நாளில் மாநகரம் முழுவதும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 2,500 வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து ரூ.15.50 லட்சம் வசூலித்தனர்.

அந்த வகையில் கடந்த 3 நாட்களில் சென்னை மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 6,187 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.42 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் 2,293 பேர் சம்பவ இடத்திலேயே அபராத தொகை செலுத்தியதில், ரூ.16.29 லட்சம் வசூலிக்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் ஆன்லைன் மற்றும் அஞ்சல் நிலையங்களில் அபராத தொகையை செலுத்தியுள்ளனர். அதன்படி மொத்தம் ரூ.42 லட்சம் போக்குவரத்து போலீசார் கடந்த 3 நாட்களில் விதிகளை மீறியவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்துள்ளனர்.

இதற்கிடையே இன்று காலை முதல் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் மாநகரம் முழுவதும் காமராஜர் சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி 100 அடி சாலை என 150 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் விதிகளை மீறி வானம் ஓட்டியவர்கள், ஹெல்மெட் அணியாமல் வானம் ஓட்டியவர்கள், ஒன்றுக்கு மேற்பட்டோர் பைக்கில் பயணம் செய்தோர் மீது போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.


Tags : Chennai , Violation of traffic rules, registration of police case, collection of fine as per new law
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...