செங்கல்பட்டு மாவட்ட வடக்கு மாவட்ட பாஜ தலைவராக வேதசுப்பிரமணியம் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக பாஜவில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர்(பரங்கிமலை கிழக்கு, மேற்கு மண்டல்கள்), ஆலந்தூர்(கண்டோன்மெண்ட் மண்டல்), பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இதன் மாவட்ட தலைவராக செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி பகுதியை செங்கல்பட்டு வடக்கு மாவட்டமாக அறிவித்து, 3வது முறையாக மாவட்ட தலைவராக அ.வேதசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர்(எஸ்சி), மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இதன் மாவட்ட தலைவராக பி.ஜி.மோகனராஜா நியமிக்கப்படுகிறார். இதே போல் திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  புதிதாக பொறுப்பேற்கும் அனைவருடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: