×

ஈரான் வழிபாட்டு தலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் பலி: இந்தியா கண்டனம்

ஷிராஸ்: ஈரானில் உள்ள வழிபாட்டு தலத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஷிராஸ் நகரில் அமைந்துள்ள ஷா-இ-செராக் என்ற வழிபாட்டுத் தலத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடார்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்:
ஈரானின் ஷா-இ-செராக் வழிபாட்டு தலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். இந்த கொடூரமான தாக்குதலானது, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : India ,Iran , Iran shrine blast, 15 dead, India condemns
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...