×

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தென்னகத்து போஸ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தென்னகத்து போஸ் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளையடுத்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,‘கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர். “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Pasumbon ,Muthuramalinga Devar ,South ,Kathakattu Bose ,Chief Minister ,Muthuramalinga ,Devar K. Stalin Dwight , Pasumpon Muthuramalinga Devar, Tennakathu Bose, Chief Minister M.K.Stalin, Twitt
× RELATED சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்...