×

மாணவிக்கு இட ஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வில் அனுமதி மறுப்பு: எம்.பி.சி. பிரிவில் கலந்தாய்வில் அனுமதிக்க நீதிமன்றம் ஆணை

சென்னை: பெற்றோர் பிற மாநிலத்தில் சாதி சான்றிதழ் பெற்றவர்கள் என்பதற்காக வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டில் மாணவிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை மறுத்தது சட்டப்படி தவறானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் 720 க்கு 506 மதிப்பெண்கள் பெற்ற மகதீப் பர்லா என்ற மாணவி தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க மாணவர் சேர்க்கை தேர்வு குழு பிற மாநிலங்களில் பெற்ற சாதிசான்று இடஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்க பட மாட்டது என்ற விளக்க குறிப்பேடு பிரிவை சுட்டிகாட்டி இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பரீசிலிக்க முடியாது என  மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நீதிபது சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அபோது பிற மாநில சாதிசான்றிதழ் பரீசிலிக்க பட மாட்டது என்ற பிரிவு மாணவர் சேர்க்கைக்கு கோரும் விண்ணப்பதாரருக்கு தான் பொருந்துமே தவிர அவரது பெற்றோருக்கு அல்ல எனவும் மாணவி தமிழகத்தில் தான் சாதிசான்றிதழ் பெற்றுள்ளார் எனவும் மாணவி தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பெற்றோர் பிற மாநிலத்தில்  சாதிசான்றிதழ் பெற்றவர் என்பதற்காக மாணவர் சேர்க்கைக்கு மறுப்பது சட்டப்படி தவறானது எனக்கூறி மனுதாரரை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக கருதி கலந்தாய்வில் அனுமதிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.


Tags : M. GP , Denial of admission to student in allotment section counselling: M.P.C. Court order to admit Kalndhai in the section
× RELATED மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு...