ஆலந்தூர் உதவி பொறியாளர் பணிமனை அலுவலகம் இடமாற்றம்

சென்னை: சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பகுதி அலுவலகம்-12க்கு (ஆலந்தூர்) உட்பட்ட உதவி பொறியாளர் அலுவலகப் பணிமனை-156 தற்போது சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, முகலிவாக்கம், சென்னை-116 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. முகலிவாக்கம் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பணிமனை-156 அலுவலக வளாகத்திற்குள் நடைபெற இருப்பதால் இப்பணிமனை அலுவலகம், 1.11.2022 (செவ்வாய்க்கிழமை) முதல் புதிய முகவரியான முகலிவாக்கம் அரச மரம் நீரேற்று நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள் மற்றும் குடிநீர் வரி / கட்டணம் செலுத்தவும் மேற்கண்ட புதிய முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தொடர்புகொள்ள உதவி பொறியாளர், பணிமனை-156க்கு 8144930156 என்ற எண்ணையும், துணை பகுதி பொறியாளர், பகுதி-12க்கு 8144930235 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: