ராஜமன்னார்-பி.டி.ராஜன் சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்: ஸ்மித் சாலை மூடல்

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ராஜமன்னார் சாலை- ஆர்.கே. சண்முகம் சாலை சந்திப்பு முதல் பி.டி.ராஜன் சாலை சந்திப்பு வரை மழை காலங்களில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த சாலையின் உயரத்தை அதிகப்படுத்தப்பட உள்ளதால் இன்று முதல் 1ம் தேதி வரை 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

2வது அவென்யூ பி.டி.ராஜன் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ராஜமன்னார் சாலை செல்ல பி.டி.ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பி.டி.ராஜன் சாலை வழியாக சென்று பி.டி.ராஜன் சாலை, ராமசாமி சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ராமசாமி சாலை வழியாக சென்று ராமசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ராஜமன்னார் சாலையை அடையலாம். போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட மற்றொரு அறிக்கை: ஸ்மித் சாலையில் மழைநீர் வடிகால் பணியின் காரணமாக, அண்ணா சாலையில் ேபாக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 29ம் தேதி (நேற்று) முதல் அண்ணா சாலையில் இருந்து பட்டுலாஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

ஒயிட்ஸ் சாலையில் இருந்து பட்டுலாஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஒயிட்ஸ் சாலையில் இருந்து ஸ்மித் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலை அடையலாம். ஸ்மித் சாலை அருகிலுள்ள யு திருப்பம் மூடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: