×

4 இன்ஜின், 100 பெட்டிகளுடன் ஆல்ப்ஸ் மலைகளுக்கு இடையே உலகின் நீளமான பயணிகள் ரயில்: சுவிஸ் ரயில்வே சாதனை

ஜெனிவா: ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக 1.9 கிமீ தூரத்திற்கு நீண்ட 100 பெட்டிகளுடன் பயணிகள் ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பிரிடா முதல் பெர்குயன் பகுதி வரை 25 கிமீ.க்கு ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அல்புலா, பெர்னினா ரயில் வழித்தடம் அமைந்துள்ளது.யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த வழித்தடம், பனி போர்த்திய மலையின் இடையே 22 சுரங்கங்கள், 48 பாலங்களுடன் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் அமைக்கப்பட்டதாகும்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து ரயில்வேயின் 175ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த வழித்தடத்தில் உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி நேற்று 4 இன்ஜின்கள், 100 பெட்டிகள் கொண்ட 1.9 கிமீ தூரத்திற்கு நீண்ட ரயில் இயக்கப்பட்டது. ஒரு மணி நேரம் இந்த ரயில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பயணித்தது. இதன் மூலம், உலகின் மிக நீளமான ரயிலை இயக்கிய சாதனையை சுவிஸ் ரயில்வே படைத்துள்ளது.


Tags : Alps , World's longest passenger train between the Alps with 4 locomotives, 100 coaches: a Swiss railway feat
× RELATED மேல ஆழ்வார்தோப்பில் பெண்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கல்